புதுக்கோட்டை: பெருமாநாடு பகுதியில் அன்புச்செல்வன் (17) என்பவரை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். அன்புச்செல்வன் மீது இருந்த கொலை வழக்கின் விசாரணைக்காக ஓசூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்தபோது இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் சிலரை அழைத்து அன்னவாசல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
