×

தங்கையுடன் தகாத உறவை கைவிடாததால் வாலிபரை கொன்று கடலில் வீசிய அண்ணன்

 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே நரிப்பையூர் வெள்ளப்பட்டி கடற்கரையில் கடந்த 16ம் தேதி வாலிபரின் சடலம் காயங்களுடன் கரை ஒதுங்கியது. வாலிநோக்கம் மரைன் போலீசார் விசாரணையில் இறந்தவர், கன்னிராஜபுரம் சிலம்பரசன் (35) என்பது தெரிய வந்தது. இவர், கன்னிராஜபுரம் பகுதியில் வீடு கட்டி கொடுக்கும் கட்டிட கான்ட்ராக்ட்ராகவும், மீன்பிடி தொழிலும் செய்து வந்துள்ளார். பிரேத பரிசோதனையில் சிலம்பரசன் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டம், வேம்பாரில் வசித்த கண்ணன் (45) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர் நண்பர்களுடன் சேர்ந்து சிலம்பரசனை கொலை செய்தது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘‘செல்வலிங்கம் என்பவரது தங்கை கன்னிராஜபுரத்தில் வசித்து வருகிறார். கணவர் இறந்த நிலையில், சிலம்பரசனுக்கும், அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு, தகாத உறவானது. தங்கையுடன் உறவை கைவிடுமாறு சிலம்பரசனை, செல்வலிங்கம் வலியுறுத்தியுள்ளார். அவர் மறுத்து, தனக்கே திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வலிங்கம், அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக சிலம்பரசனின் நண்பர்களான மாரிமுத்து (26), ரமேஷ்கண்ணன் (26) உதவியை நாடினார்.

அதன்படி கடந்த 15ம் தேதி இரவு மாரிமுத்து, ரமேஷ்கண்ணன், சிலம்பரசன் ஆகியோர் வெள்ளப்பட்டி கடற்கரையில் மது குடித்துள்ளனர். இருவரும் சிலம்பரசனை அளவுக்கு அதிகமாக குடிக்க வைத்து, செல்வலிங்கத்தை வரவழைத்தனர், பின்னர் படகு துடுப்பால் சிலம்பரசனை தாக்கி கொன்று, உடலை கடலில் தூக்கி போட்டுள்ளனர். பின்னர் மாரிமுத்து, ரமேஷ்கண்ணனுக்கு பணம் கொடுத்து குற்றாலம் அனுப்பி வைத்துள்ளார். கொலையில் தொடர்புடைய 3 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர்’’ என்று தெரிவித்தனர்.

Tags : Ramanathapuram ,Vellapatti beach ,Narippaiyur ,Sayalgudi ,Ramanathapuram district ,Valinokkam Marine Police ,Kannirajapuram ,Silambarasan ,Kannirajapuram… ,
× RELATED திருப்பத்தூர் அருகே நடுரோட்டில்...