×

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ரோப் கார் சேவை மே 22ஆம் தேதி இயங்காது: கோயில் நிர்வாகம்

திண்டுக்கல் மாவட்டத்தின் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக ரோப்கார் சேவை வரும் 22ஆம் தேதி இயங்காது கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பழனி மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், தினசரி, மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், ரோப்கார் நிலையத்தில் உள்ள கம்பி வடங்களின் தரம் மற்றும் உறுதித்தன்மை, ரோப்கார் பெட்டிகளின் பாதுகாப்பு அம்சங்கள், மின்சார மோட்டார்கள் மற்றும் பிரேக் சிஸ்டம்கள் ஆகியவற்றை மே 22ஆம் தேதி தீவிரமாக ஆய்வு செய்யப்படவுள்ளது.

பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்து, சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட பின்னர், வழக்கம் போல் ரோப்கார் சேவை மீண்டும் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Palani Thandayuthabani Swamy Temple ,Temple Administration ,Palani Arulmigu Thandayuthabani Swamy Hill Temple ,Dindigul district ,administration ,Palani ,
× RELATED காரைக்கால் – பேரளம் இடையே 40...