திருவாரூர்: முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே அப்துல் பாசித் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த சபீக் அகமது, முகமது யூனீஸ் ஆகிய இருவரை முத்துப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
