×

ரஷ்ய எண்ணெயை வாங்க இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு மேலும் 1 மாதத்திற்கு அமெரிக்கா அனுமதி

வாஷிங்டன்: கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக, சர்வதேச அளவுகோலான ‘பிரெண்ட்’ (Brent) கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 111 டாலராக உயர்ந்தது உலகநாடுகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகளுக்கும் அமெரிக்கா மே 16 அல்லது 17 வரை மட்டுமே அனுமதி வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்த அனுமதி மேலும் 1 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், ரஷ்யாவின் கடல்வழிப் பாதைகள் வாயிலாகக் கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்யும் இந்தியா உள்ளிட நாடுகளுக்கு அமெரிக்கா மேலும் 1 மாதம் அனுமதி வழங்கி இருக்கிறது. சோஷியல் மீடியா போஸ்ட் ஒன்றில் அமெரிக்க கருவூலத் துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் குறிப்பிட்டிருப்பதாவது, “கடலில் நடுவழியில் தேங்கி கிடக்கும் ரஷ்ய எண்ணெயை, கச்சா எண்ணெய் விலை உயர்வால் பாதிக்கப்படும் நிலையில் உள்ள நாடுகள் தற்காலிகமாகப் பெற்றுக்கொள்ளும் வகையில், 30 நாட்களுக்கான தற்காலிகப் பொது உரிமம் ஒன்று வழங்கப்படும்,” என்று கூறியிருக்கிறார்.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பு கச்சா எண்ணெய் விலையை குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அமெரிக்காவின் இந்த அனுமதி நீட்டிப்பு அறிவிப்பானது இந்திய சுத்திகரிப்பு ஆலைகளுக்கும் பயனளிக்கும். இதனிடையே அமெரிக்காவின் தடைகள் அல்லது விலக்குகள் எதையும் பொருட்படுத்தாமல், இந்தியா ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருவதாகவும், நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் வணிகத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்திலும் இந்த போக்கு தொடரும். என்று நேற்று பெட்ரோலிய அமைச்சகத்தைச் சேர்ந்த ஒரு உயர் அதிகாரி தகவல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : United ,States ,India ,Washington ,Russia ,
× RELATED அதானி குழுமம் மீதான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது அமெரிக்கா..!