பெய்ஜிங்: தெற்கு சீனாவின் குவாங்சி மாகாணத்தில் உள்ள லியூசோ நகரில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். பல இடங்களில் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. சுமார் 13 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இதனிடையே பாதுகாப்பு கருதி நகரில் இருந்து சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சம்பவங்களில் 4 பேர் காயமடைந்தனர். 2 பேர் பலியாகி உள்ளனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கிய முதியவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
