×

தெலங்கானாவை சேர்ந்தவர்: சிகாகோ சாலை விபத்தில் இந்திய மாணவி பலி

 

வாஷிங்டன்: தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் நவ்யா கடுசு(25). இவர் சிகாகோவில் தங்கி உயர்கல்வி பயின்று வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு (மே 16) நவ்யா கடுசு தன் நண்பர்கள் 6 பேருடன் இண்டியானா மாகாணம் லேக் கவுன்டிக்கு மினி வேனில் சென்றார். கிரவுன் பாயின்ட் நகருக்கு அருகிலுள்ள இன்டர்ஸ்டேட் 65 என்ற நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் மினி வேன் மீது பயங்கரமாக மோதியது.

இதில் நிலைகுலைந்த மினி வேன் சாலையோரத்தில் இருந்த வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்னாது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நவ்யா கடுசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 6 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Telangana ,Chicago ,Washington ,Navya Katusu ,Nalgonda district ,Lake… ,
× RELATED அமெரிக்காவில் சாண்டியா கோவில் மசூதி அருகே துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி