பள்ளிக்கரணையில் கஞ்சா விற்பனை பழைய குற்றவாளி உள்பட இரண்டு பேர் பிடிபட்டனர்

வேளச்சேரி, மே 18: பள்ளிக்கரணை பவானி அம்மன் கோயில் தெரு, ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக பள்ளிக்கரணை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த இருவரை பிடித்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 1 கிலோ 600 கிராம் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். இதை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

அதில் ஒருவர் வேளச்சேரியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ற ஹரி பிரசாத் (35) என்பதும், இன்னொருவர் அவரது நண்பர் சைதாப்பேட்டையை சேர்ந்த அப்துல் ரஹீம் (25) எனவும் தெரியவந்தது. மேலும் பாலசுப்பிரமணியம் ஹரி பிரசாத் போலீசாரால் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த ஒரு முக்கிய குற்றவாளி என்பதும், இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

 

Related Stories: