செங்கல்பட்டு பகுதியில் இடியுடன் கன மழை

செங்கல்பட்டு, மே 18: செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதியில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
தமிழகத்தில் தற்போது அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் வதைத்து வருகிறது. கோடை வெயிலுக்கு மத்தியில் அவ்வப்போது பல்வேறு மாவட்டங்களில் மழையும் பெய்து வருகிறது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சிங்கபெருமாள்கோவில், ஆத்தூர், திம்மாவரம், மாமண்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

நேற்று காலை முதலே செங்கல்பட்டு பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனை தொடர்ந்து, மதிய வேளையில் சற்றும் எதிர்பாராத நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பயங்கர இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. கடந்த ஓரிரு மாதங்களாக கடும் வெப்பக் காற்றுடன் கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் தற்போது குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

Related Stories: