×

தனது ஆதரவாளர்களுடன் அதிமுக முன்னாள் எம்எல்ஏ தவெகவில் இணைந்தார்

அம்பத்தூர்: தனது ஆதரவாளர்களுடன் அதிமுக முன்னாள் எம்எல்ஏ தவெகவில் இணைந்தார். திருவள்ளூர் மத்திய மாவட்ட அமமுக செயலாளர் வேதாச்சலம். அக்கட்சியிலிருந்து விலகி விஜய் தலைமையிலான தவெக கட்சியில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார். சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களை வென்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது.

அந்த வகையில் திருவள்ளூர் மத்திய மாவட்ட அமமுக செயலாளரும், முன்னாள் அதிமுக எம்எல்ஏவுமான வேதாச்சலம் கொரட்டூரில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்து விசில் அடித்தபடி தவெகவில் இணைவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேதாசசலம், ‘‘அமமுக கட்சியில் பணியாற்ற நிர்வாகிகள் யாரும் விரும்பவில்லை. தமிழகத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள விஜய் தலைமையில் தவெக கட்சியில் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். அதனால் அமமுக கட்சியிலிருந்து நாங்கள் அனைவரும் விடுவித்துக் கொண்டு தவெகவில் இணைந்துள்ளோம்’’ என்றார்.

Tags : Adimuga ,MLA Tavega ,Thiruvallur Central District ,Affairs Secretary ,Vedachalam ,Davega ,Vijay ,Akkatsi ,TAKEKA ,
× RELATED பெரம்பூரில் சிக்னல் கோளாறு மின்சார ரயில் சேவை பாதிப்பு