சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடலின் சில (பகுதிகளில் பருவமழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 7-11 செ.மீ. வரை மழைக்கு வாய்ப்பு என்பதால் மே 15,16,17, நாட்களில் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
