சென்னை: திமுக எம்பி வில்சன் சமூக வலைத்தள பதிவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு 144 வாக்குகள் பெற்றதாக கூறப்படுவது சட்டப்படி தவறு. 118 (144-26) என்பதே சரி (25 அதிமுக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு அமமுக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினரின் வாக்கு). அதிமுக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களும், அமமுகவின் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் தங்களின் தனிப்பட்ட ஆதாயங்களுக்காகவும், பண பயன்களுக்காகவும் ஆளும் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். சட்டப்பேரவைத் தலைவரின் இந்த முடிவும், அதிருப்தி உறுப்பினர்களின் வாக்குகளும் முறையான ஆதாரங்களுடன் ஆளுநரிடமோ அல்லது நீதிமன்றத்திலோ மன்ற உறுப்பினர்களின் முன்வைக்கப்பட்டால், அந்த 26 அதிருப்தி வாக்குகள் சட்டவிரோதமாக்கப்பட்டு செல் லாததாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, 26 உறுப்பினர்களும் பணத்திற்காகவோ அல்லது ஆதாயத்திற்காகவோ கட்சி மாறி வாக் களித்தது உறுதிசெய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட உறுப்பினர்களை அவையிலிருந்து தகுதி நீக்கம் செய்யவோ அல்லது வெளி யேற்றவோ வழிவகுக்கும். இருப்பினும் எதார்த்தம் என்னவென்றால், திமுக கூட்டணி கட்சிகள் உதவியால் பெரும்பான்மைக்கு தேவையான 118 வாக்குகளை பெற்று நூலிழையில் தமிழக வெற்றிக்கழகம் அரசு தப்பிப்பிழைத்துள்ளது. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
