பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

சென்னை: பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். பொள்ளாச்சி -பல்லடம் சாலையில் கார் மீது லாரி மோதியதில் தனபால், மேனகா, சினேகா, கனிஷ்கா ஆகியோர் உயிரிழந்தனர். 4 பேர் உயிரிழந்த செய்தியை கேட்டு மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறும் சுர்ஜித்துக்கு ரூ.1 லட்சம் வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.

Related Stories: