சென்னை: அமமுக எம்.எல்.ஏ காமராஜ் பெயரில் போலி ஆதரவு கடிதத்தை தவெக, ஆளுநரிடம் கொடுத்ததாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை காவல் துறை விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் எம்.எல்.ஏ காமராஜ் தவெக-விற்கான ஆதரவு கடிதத்தில் கையெழுத்திடுவது போன்ற வீடியோவை தவெக வெளியிட்டது. ஆனால் அந்த வீடியோவே தவெக-விற்கு தற்போது எதிர்விளைவை ஏற்படுத்த தொடங்கி இருக்கிறது. பலரும் ஒரு சட்டமன்ற உறுப்பினரிடம் ஆதரவு கடிதத்தை காரில் வைத்தா வாங்குவது என்று சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்கிறர்கள் மூத்த அரசியல் விமர்சகர்கள். அவரிடம் காரில் வைத்து கையெழுத்து வாங்கும் அந்த வீடியோ காட்சியே, குதிரை பேரம் நடந்திருக்கும் என்ற சந்தேகத்தை வலுவாக்குகிறது என்று சொல்கிறர்கள்.
இந்த சூழலில் தவெக அந்த முழு வீடியோவை வெளியிட வேண்டியது தானே, எதற்கு கையெழுத்து போடுவது போன்ற காட்சியை மட்டும் வெளியிட வேண்டும். முழு வீடியோவை வெளியிட்டால் என்ன பேரம் நடந்தது என்று தெரிந்து விடுமல்லவா என்று தினகரன் கூறி இருக்கிறார். செய்தியாளர்ளை சந்தித்த தினகரன்”ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மோசடி செய்கிறது தவெக. ஆதரவு கடிதத்தை எப்படி வெள்ளை பேப்பரில் எழுதியா காமராஜ் கொடுத்திருப்பார்? எனது ஒப்புதலோடு கடிதம் கொடுத்தார் என நிரூபிக்க தயாரா? கையெழுத்திட்ட வீடியோவை ஆளுநரிடம் ஒப்படைக்காதது ஏன்? காமராஜ் கையெழுத்திடும் முழு வீடியோவை வெளியிட வேண்டும். என்ன பேரம் பேசினார்கள் என தெரிந்துவிடும். வீடியோ வெளியிட்ட தவெக ஒரிஜினல் கடிதத்தை வெளியிட வேண்டியது தானே என சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய டிடிவி, விஜய் பெரிய ஹீரோவாக இருக்கலாம், 108 சீட் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் கடந்நத 30 வருடங்களுக்கும் மேலாக நாங்கள் அரசியலில் இருக்கிறோம். பல அரசுகள், பல முதல்வர்கள், பல கட்சிகள், பல விசரணைகளை, பல ரெய்டுகளை நாங்கள் பார்த்தவர்கள். உங்களை மாதிரி ஓடி ஒளிந்து கொள்ளும் ஆள் நாங்கள் கிடையாது என்று சரமாரியாக விமர்சித்து உள்ளார்.
