சென்னை: ராஜஸ்தானில் சாலை விபத்தில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மரணமடைந்த செய்தி அதிர்ச்சி,வேதனை அளிக்கிறது என தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி வாகன விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் துயரத்தையும் அளிக்கிறது.
எளிமையும் அன்பும் கொண்ட நல்ல மனிதர் ஆர்.பி. சௌத்ரி. கேப்டன் விஜயகாந்த்துடன் இணைந்து கண்ணுபட போகுதய்யா போன்ற பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றியவர். அவரின் மறைவு குடும்பத்திற்கு மட்டுமல்ல திரையுலகிற்கும் பேரிழப்பு.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்” என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
