சாத்தனூர் அணை பாசன கால்வாயில் 6 மணிக்கு மேல் குளிக்க தடை குளிக்க வந்தவர்களை போலீசார் எச்சரித்த அனுப்பினர்

தண்டராம்பட்டு, மே 6: சாத்தனூர் அணை பாசன கால்வாயில் 6 மணிக்கு மேல் குளிக்க தடை விதித்து போலீசார் குளிக்க வந்தவர்களை எச்சரித்து அனுப்பினர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவது சாத்தனூர் அணையாகும். பொன்விழா கண்ட இந்த அணை 119 அடி உயரம் கொண்டது. அணை முழு அளவு நீர் நிரம்பியதால் விவசாய பாசனத்திற்காக தென்பெண்ணை, ஆறு திருக்கோவிலூர், பழைய ஆயக்கட்டு, வலது புறம் இடது புறம் கால்வாய் வழியாக திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வினாடிக்கு 550 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

தற்போது கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் வெயிலின் தாகத்தை தணிப்பதற்காக பொதுமக்கள் இளைஞர்கள் விவசாய பயன்பாட்டிறகாக திறந்து வடப்பட்ட தண்ணீரில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். நேற்று மாலை 6 மணி கடந்தும் சாத்தனூர் அணையில் இருந்து விவசாய பயன்பாட்டிற்காக பாசன கால்வாயில் திறந்து விடப்பட்ட தண்ணீரில் பொதுமக்கள், இளைஞர்கள் அதிகளவு குளித்துக் கொண்டு இருந்தனர். இதனால் வாணாபுரம் போலீசார் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மாலை 6 மணிக்கு மேல் யாரும் கால்வாயில் குளிக்க வேண்டாம் என இளைஞர்களிடம் கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Related Stories: