தபால் வாக்குச்சீட்டு உறைகள் அனுமதியின்றி பிரிப்பு: தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங். புகார்

கொல்கத்தா: கொல்கத்தாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரப் பாதுகாப்பு அறையில் அனுமதியின்றி தபால் வாக்குச்சீட்டு உறைகள் பிரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.  மேற்கு வங்க மாநிலம், வடக்கு மற்றும் கிழக்கு கொல்கத்தாவில் பல சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குதிராம் அனுசிலன் கேந்திரா பள்ளியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த பள்ளிக்கு வெளியே முகாமிட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று அதிகாலை 4மணிக்கு எட்டு தபால் வாக்குச்சீட்டு பெட்டிகள் கொண்டுவரப்பட்டு சிசிடிவி கண்காணிப்பு இல்லாத ஒரு அறைக்கு எடுத்துச்செல்லப்பட்டதாக குற்றம்சாட்டினார்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தபால் வாக்குச்சீட்டுகள் உள்ள ஒவ்வொரு மில்லிமீட்டர் இடமும் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டும் என்று நாங்கள் கோரி வருகிறோம்.

ஆனால் இந்த பெட்டிகள் உள்ளே கொண்டு செல்லப்பட்டபோது சிசிடிவி கண்காணிப்பு இல்லாத அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது தெளிவாக தெரிந்தது. இது ஏன் நடக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: