அமலாக்கத்துறையால் ரூ.81000கோடி சொத்துக்கள் முடக்கம்

புதுடெல்லி: 2025-2026ம் நிதியாண்டில் அமலாக்கத்துறையால் ரூ.81ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அதன் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில்,‘‘பணமோசடி தடுப்பு சட்டத்தின் கடுமையான விதிகளின் கீழ் அமலாக்கத்துறையால் நடத்தப்பட்ட தேடுதல் அல்லது சோதனைகளின் எண்ணிக்கையானது 2025-2026ம் நிதியாண்டில் சுமார் 2 மடங்காக அதிகரித்து 2892ஆக அதிகரித்துள்ளது.

2024-2025ம் நிதியாண்டில் அமலாக்கத்துறையால் 214 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் கடந்த நிதியாண்டில் 156 பேர் மட்டுமே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது சுமார் 27சதவீத வீழ்ச்சியாகும். கடந்த நிதியாண்டில் 712 உத்தரவுகள் மூலமாக முடக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 171 சதவீதம் அதிகரித்து ரூ.81,422 கோடியாக உயர்ந்துள்ளது. 2025ம் நிதியாண்டில் 775 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கடந்த நிதியாண்டில் அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரித்து 1080 வழக்குகளாக உயர்ந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: