லா லிகா கால்பந்து சாமு கோஸ்டா மேஜிக் கோல்: மலோர்காவிடம் வீழ்ந்தது கிரோனா

கிரோனா: லா லிகா கால்பந்து போட்டியில் நேற்று, மலோர்கா அணி, 1-0 என்ற கோல் கணக்கில் கிரோனா அணியை வீழ்த்தியது. ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து அணிகள் லா லிகா கால்பந்து போட்டித் தொடரில் ஆடி வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் மலோர்கா, கிரோனா அணிகள் மோதின. துவக்கம் முதல் இரு அணி வீரர்களும் கோல் போடுவதில் தீவிரம் காட்டி பம்பரமாய் சுழன்றாடினர்.

முதல் பாதி முடியும் வரை கோல் போடுவதற்கான போராட்டம் நீடித்து வந்தது. 43வது நிமிடத்தில் மலோர்கா அணியின் சாமு கோஸ்டா அட்டகாசமாக பந்தை கடத்திச் சென்று அணியின் முதல் கோல் போட்டு கரவொலி பெற்றார். அதன் பின் இரு அணி வீரர்களும் கோல் போட கடுமையாக முயற்சித்தும் கோல் விழவில்லை. கிரோனா அணிக்கு 5 முறை பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தும் அவற்றை வீணாக்கினர்.

கடைசியில் 1-0 என்ற கோல் கணக்கில் மலோர்கா அணி அபார வெற்றி பெற்றது. லா லிகா கால்பந்து தொடர் புள்ளிப் பட்டியலில், பலம் வாய்ந்த பார்சிலோனா அணி 33 போட்டிகளில் ஆடி 28ல் வெற்றிகளை குவித்து 85 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ரியல் மாட்ரிட் அணி, 33 போட்டிகளில் 23ல் வென்று 74 புள்ளிகளுடன் 2ம் இடத்தை பிடித்துள்ளது. மலோர்கா அணி, 38 புள்ளிகளுடன் 15ம் இடத்திலும், கிரோனா அணி 38 புள்ளிகளுடன் 16ம் இடத்திலும் உள்ளன.

Related Stories: