சென்னை: கால்நடை மற்றும் கோழிகளுக்கு கோடைகால பராமரிப்பு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. கறவை மாடுகளுக்கு எப்பொழுதும் தண்ணீர் கிடைக்கும் வகையில் தண்ணீர் தொட்டியை அமைக்க வேண்டும். கறவை மாடுகளில் மாலையில் பால் கறக்கும் நேரத்தை தாமதப்படுத்த வேண்டும். அடைக்கப்பட்ட அல்லது நெருக்கமான இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம் என தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை வலியுறுத்தியுள்ளது.
