செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்றால் கடும் நடவடிக்கை: அதிகாரிகள் எச்சரிக்கை!

 

சென்னை: செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாம்பழம் சீசன் மார்ச் இறுதியில் தொடங்கி ஜூலை வரை நீடிக்கும். இந்த ஆண்டு ஏப்ரல் இறுதியில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், வரத்து குறைவாக இருப்பதால் விலை சற்று அதிகமாக உள்ளது. சந்தைகளில் மாம்பழங்கள் விற்பனை சூடுபிடித்துள்ள நிலையில், கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரசாயனம் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். மேலும் ரசாயனம் பயன்படுத்தி செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுகிறதா? என ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரசாயனம் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்தால் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Related Stories: