அந்தமான் தீவில் பழங்குடியின தலைவர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு

ஸ்ரீவிஜயபுரம்: அந்தமான் மற்றும் நிகோபர் தீவுக்கு சென்றுள்ள ராகுல்காந்தி அங்குள்ள பழங்குடியின தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி கடந்த 26ம் தேதி அந்தமான் மற்றும் நிகோபர் தீவுக்கு பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் நேற்று நிகோபர் மாவட்டத்தில் உள்ள கேம்ப்வெல் பகுதியில் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களுடன் சென்று ராகுல்காந்தி பழங்குடியின சமூகத்தினரின் தலைவர்களை சந்தித்தார்.

அப்போது கிரேட் நிகோபர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு திட்டம் குறித்து பழங்குடியின தலைவர்கள் ராகுலிடம் கவலை தெரிவித்தனர். இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமை, சுற்றுச்சூழல் அபாயங்கள் மற்றும் பழங்குடியினரின் உரிமைகள் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

அரசினால் முன்மொழியப்பட்டுள்ள கிரேட் நிகோபார் திட்டங்களால் கடுமு் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், அரசு தங்களது கவலைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்திரா பாயிண்ட்டிற்கு சென்ற ராகுல்காந்தி, அங்கு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

Related Stories: