புது டெல்லி: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ஈடுபட்டதாக 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் கண்டறியப்பட்டு முடக்கபட்டுள்ளன. இது தொடர்பான தகவலை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. போலீஸ், சிபிஐ மற்றும் ED அதிகாரி போல் நடித்து டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் பொதுமக்கள் மிரட்டப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் பறிக்கப்பட்டு வந்ததுள்ளது.
