குஜராத் உள்ளாட்சி தேர்தலில் பாஜ வெற்றி

அகமதாபாத்: குஜராத்தில் மாநகராட்சி, நகராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், பாஜ அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி படுதோல்வி அடைந்துள்ளன. குஜராத்தில் 15 மாநகராட்சிகள், 84 நகராட்சிகள், 34 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 260 தாலுகா பஞ்சாயத்து தேர்தல் கடந்த ஞாயிறன்று நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது.

நேற்று மாலையில் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி மொத்தம் உள்ள 9,900 இடங்களில் பாஜ 6,472 இடங்களை கைப்பற்றி மற்ற கட்சிகளை விட மிக பெரும் முன்னிலை வகிக்கிறது. அடுத்தபடியாக காங்கிரஸ் 1412 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சைகள் 597 இடங்களை வென்றுள்ளன. தேர்தல் நடந்த 15 மாநகராட்சிகள் முழுவதையும் பாஜ கைப்பற்றியுள்ளது.

34 மாவட்ட பஞ்சாயத்துக்களில் 30 மாவட்ட பஞ்சாயத்துகள் பாஜ வசமாகியுள்ளது. தாலுகா பஞ்சாயத்துக்களில் 3132 இடங்களையும்,மாவட்ட பஞ்சாயத்துக்களில் 765 இடங்களையும், நகராட்சிகளில் 399, மாநகராட்சிகளில் 64 இடங்களையும் அந்த கட்சி கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி தாலுகா பஞ்சாயத்துக்களில் 839, மாவட்ட பஞ்சாயத்துக்களில் 110, நகராட்சிகளில் 399, மாநகராட்சிகளில் 64 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

Related Stories: