தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.40,000 கோடியில் அமைய உள்ள கப்பல் கட்டும் தளப் பணி அடுத்த மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹுண்டாய் குழுமத்தின் ஹெச்.டி. கொரியா ஷிப் பில்டிங் & ஆஃப்ஷோர் என்ஜினீர்ஸ் நிறுவனம் பணியை தொடங்குகிறது. கப்பல் கட்டும் தொழிலில் உலக அளவில் முன்னணியில் உள்ள நிறுவனம் ஹெச்.டி. கொரியா ஷிப் பில்டிங் நிறுவனம். தூத்துக்குடியில் ரூ.40,000 கோடியில் முதலீடு செய்யும் ஒப்பந்தத்தை தேர்தல் முடிந்ததும் கொரிய நிறுவனம் செய்ய உள்ளது. தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசுடன் முதலீட்டை உறுதி செய்யும் ஒப்பந்தத்தை கொரிய நிறுவனம் மேற்கொள்ளும். தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் 2025 டிச.7ல் ஒப்பந்தம் செய்தது கொரிய நிறுவனம்
