கரூர்: சட்டவிரோத மணல் கடத்தல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கிய கரூர் நீதிமன்றம் மார்ச் 31ம் தேதி சரணடைய உத்தரவிட்டது. அன்று சரணடையாததால் மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம் ஏப்.29ம் தேதி சரணடைய உத்தரவிட்ட நிலையில் இன்றே நீதிமன்றத்தில் ஆஜரானார்.
