பறக்கும் படையினர் மூலமாக துரித நடவடிக்கை: லாட்ஜ், காட்டேஜ்களில் போலீசார் சோதனை: தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்

 

வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க வரிசையில் காத்திருக்க தற்காலிக நிழற்குடை வசதி செய்யப்பட்டுள்ளன. ஆண் மற்றும் பெண் வாக்காளர்களுக்காக தனித்தனி கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாற்று திறனாளி்கள், 85 வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடியில் சாய்வு தளம், சக்கர நாற்காலி வசதி, வாக்குச்சாவடியை அடையாளம் காண தேவையான சின்னங்கள் மற்றும் வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி வளாகம் வண்ணமயமான ஓவியங்கள், தேர்தல் விழிப்புணர்வு படங்கள் மற்றும் நேர்த்தியான அலங்காரங்களுடன், வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் அமைக்கபட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி தொகுதியில் மாதிரி மற்றும் பசுமை வாக்கு சாவடியாக ஜோசப் பள்ளியும், குன்னூரில் ஆண்டனி பள்ளியும், கூடலூரில் கூடலூர் அரசு பள்ளியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: