பெரம்பூர், எழும்பூரில் சோதனை ரூ.24.98 லட்சம் மதிப்பு நகை, பணம் பறிமுதல்

சென்னை, ஏப்.22: பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று பயணி ஒருவரின் பையை சோதனை செய்தபோது ரூ.10.31 லட்சம் மற்றும் ரூ.13.57 லட்சம் மதிப்புள்ள 92 கிராம் தங்கம் சிக்கியது. விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மூர்த்தி (45), வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த ஜெகன் (30), கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் (50), பாலமுருகன் (32) என்பதும், உரிய ஆவணமின்றி நகை, பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த நகை, பணத்தை பறிமுதல் செய்து, துறைமுகம் மற்றும் பெரம்பூர் தொகுதிகளின் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
 எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பேசின் பிரிட்ஜ் ஹஜ் பில்டிங் அருகே நேற்று முன்தினம் எழும்பூர் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கார்த்திக் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது ரூ.1.10 லட்சம் ரொக்கம் சிக்கியது. விசாரணையில், புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த பியூஸ் குமார் (21) என்பதும், சவுகார்பேட்டையில் நகைக்கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. , உரிய ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்தனர்.

 பெரம்பூர் ரயில்வே பாதுகாப்பு படையினர், தேர்தல் சிறப்பு படை குழுவினர் மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து நேற்று முன்தினம் இரவு பெரம்பூர் ரயில் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரயில் நிலையத்தின் 1வது நடைமேடையில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த நபரிடம் சோதனை மேற்கொண்டபோது ஒரு கிராம் மதிப்புள்ள 32 தங்க நாணயங்கள் இருந்தன. விசாரணையில், மாதவரம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (45) என்பதும், பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இவரிடம், தங்க நாணயங்களுக்கான ஆவணங்கள் இல்லாததால் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் தேர்தல் சிறப்பு படையினர் ஒரு கிராம் மதிப்புள்ள 32 தங்க நாணயங்களை பறிமுதல் செய்து பெரம்பூரில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: