23ம் தேதி தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை

 

திருவள்ளூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குனர் சி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணியிடங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை உள்ள தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான வரும் 23ம் தேதி அன்று வாக்களிக்க ஏதுவாக சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தேர்தல் நாளன்று வாக்களிப்பது அவசியம் என்று தொழிலாளர்களுக்கு தொழிற்சாலை உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும். விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் பற்றிய தகவல்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: