×

தமிழகத்தில் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை.! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்…

சென்னை: வரும் 23-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தில் மொத்தம் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, அந்த வாக்குசாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என மத்திய சிறப்பு தோ்தல் பாா்வையாளா் பிரதாப் சிங் தகவல் தெரிவித்து உள்ளார்.

செய்தியாளா்களிடம் பேசிய தமிழக தோ்தல் மத்திய சிறப்புப் பாா்வையாளா் பிரதாப் சிங், 23-ஆ, தேதி நடைபெற உள்ள தோ்தல் வாக்குப் பதிவை சுமுகமாக நடத்தும் வகையில் அரசியல் கட்சிப் பிரமுகா்களிடம் ஆலோசனை நடைபெற்றது. தமிழகத்தில் 105 சட்டமன்ற தொகுதிகளில் தோ்தல் ஆணையம் நிா்ணயித்த வரம்பைக் காட்டிலும் வேட்பாளா்கள் கூடுதலாக செலவு செய்துள்ளனா். தவிர இதுவரை ரூ.1,200 கோடி அளவுக்கு ரொக்கம், தங்கம், வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் ரூ.500 கோடி மதிப்பிலான பொருட்கள் தொடா்பாக வழக்குகள் பதியப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதை வஸ்துக்களை பொருத்தவரை திருவள்ளூா் மாவட்டத்தில் அதிகமாகவும், அடுத்ததாக சென்னையிலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். சென்னை மாவட்ட எல்லைப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த மாவட்டத் தோ்தல் அலுவலா் கோரியுள்ள நிலையில், சென்னை மாவட்ட எல்லையில் கூடுதலாக துணை ராணுவப் படையினா் நிறுத்தப்படுவா் என்றார்.

தமிழகத்தில் சுமார் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதலாக பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. சுமார் 2 லட்சம் பேரிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன.
சென்னை மாவட்டத்தை பொறுத்த வரை கடந்த முறை 74% வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 85 சதவீதம் வரை பதிவாக கூடும் என்று எதிா்பாா்ப்பதாக குறிப்பிட்டார். வெயில் அதிகம் இருக்கும் என்பதால் பல நகரங்களில் வாக்காளா்கள் சிரமமின்றி வாக்களிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் பிரதாப் சிங் கூறி இருக்கிறார்.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil Nadu Assembly elections ,Union Special Councillor ,Bhavyalya Pratap Singh ,
× RELATED தேர்தல் நாளன்று முதியோர்,...