×

தேர்தல் நாளன்று முதியோர், மாற்றுத்திறனாளிகள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!

சென்னை: சென்னையில் ஏப்.23ம் தேதி மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அரசின் சாதாரண கட்டண பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். வயதுச் சான்று மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளதாவது; “23.04.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் நாள் அன்று மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்கள், தங்களது வாக்குகளை பதிவு செய்ய மா.போ.கழக சாதாரண கட்டண பேருந்துகளில் பயணம் செய்யும்போது கட்டணமின்றி பயணம் செய்யலாம்.

1. 60 வயதிற்கு மேற்பட்ட மூத்தக் குடிமக்கள் வாக்குகளை பதிவு செய்ய மா.போ.கழக சாதாரண கட்டண பேருந்துகளில் மட்டும் பயணம் செய்யும்போது ஏதேனும் வயது சான்று மற்றும் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து, மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்களை அளிக்காமல், கட்டணமில்லா பயணச்சீட்டினை நடத்துநரிடம் பெற்று பயணம் செய்யலாம்.

2. மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்கள் வாக்குகளை பதிவு செய்ய மா.போ.கழக சாதாரண கட்டண பேருந்தில் பயணம் செய்தால் அவர்கள் UDID Card மற்றும் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பயணச்சீட்டினை பெற்று பயணம் செய்யலாம்.

தேர்தல் நாள் 23.04.2026 அன்று ஒரு நாள் மட்டுமே இச்சலுகையில் பயணம் செய்யலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Tags : Transport Corporation ,Chennai ,
× RELATED சோழிங்கநல்லூர், வேளச்சேரி,...