×

கர்நாடக பூங்காவில் பல வண்ணங்களில் பூத்துள்ள மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது

ஊட்டி : ஊட்டியில் உள்ள கர்நாடக மாநில பூங்காவில் பல வண்ணங்களில் பூத்துள்ள மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

குறிப்பாக, கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அனைத்து பூங்காக்களையும் தயார் செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

இதனால், பெரும்பாலான பூங்காக்களில் மலர்கள் இன்றி காட்சியளிக்கிறது. அதே சமயம் ஊட்டி அருகே உள்ள கர்நாடக மாநில தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவும் கோடை சீசனுக்காக தற்போது தயார் செய்யப்பட்டு வருகிறது.

பூங்காவில் உள்ள அனைத்து பாத்திகளிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பூங்காவில் உள்ள ஒரு சில பாத்திகளில் பல வண்ணங்களில் டெய்சி மலர்கள் உட்பட பல வகையான மலர்கள் பூத்துள்ளன.

சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் பூத்துள்ள இந்த மலர்கள் அழகாக காட்சி அளிக்கிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும், இதன் அருகே நின்று பலரும் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். ஓரிரு நாட்களில் பூங்கா முழுவதிலும் பல்வேறு வகையான மலர்கள் பூத்துக்குலுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Karnataka State Park ,Ooty ,Nilgiri district ,
× RELATED கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை...