×

கோவை வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடு

கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 23ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதையடுத்து, வாக்குச்சாவடி மையங்கள் தீவிரமாக தயாராகி வருகிறது. குறிப்பாக, வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோர் தங்களின் வாக்குகளை எளிதாக செலுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சக்கர நாற்காலிகள் எளிதாக செல்ல சாய்தள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, சுமார் 1,500 சக்கர நாற்காலிகள் குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது.

இவை, வாக்குச்சாவடி மையங்களின் முன்பு வைக்கப்பட உள்ளன. மேலும், ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய ஒரு தன்னார்வலர்கள் வீதம் மொத்தம் 1,700 பேர் பயிற்சி அளிக்கப்பட்டு அந்த பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வரிசையில் காத்திருக்காமல் வாக்களிக்கும் வகையில் முன்னுரிமை வசதி செய்யப்பட்டுள்ளது.

பார்வையற்றவர்கள் மற்றும் பிற மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு உதவியாக தங்களுடன் ஒருவரை வாக்குச்சாவடி அறைக்குள் அழைத்து செல்ல முடியும். தவிர, சைகை மொழியில் குறிப்புகள் சொல்லவும், வாக்குச்சாவடிகளை எளிதில் கண்டுப்பிடிக்கும் வகையிலும் வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Tags : Coimbatore ,Coimbatore district ,
× RELATED குப்பை கழிவுகளால் பொதுமக்கள்...