×

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

ஈரோடு,ஏப்.20: விருதுநகர் மாவட்டம் சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (50). எலக்ட்ரீசியன். இவர், ஈரோடு முத்தம்பாளையத்தில் வைரமுத்து என்பவருக்கு சொந்தமான புதிய கட்டிடத்தில் வயரிங் வேலை செய்து வந்தார். கடந்த 5ம்தேதி முதல் மாடியில் உள்ள பால்கனியில் வேல்முருகன் வேலை செய்தபோது, அலுமினிய பைப் அருகில் உள்ள மின் கம்பியில் உரசி, மின்சாரம் தாக்கி வேல்முருகன் தூக்கி வீசப்பட்டார்.

இதில், அவருக்கு தலை மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக சக தொழிலார்கள், வேல்முருகனை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக மதுரை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Erode ,Velmurugan ,Shanmugasundarapuram ,Virudhunagar district ,Vairamuthu ,Muthampalayam, Erode ,
× RELATED கோபி தொகுதி முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்