×

மாவட்டத்தில் தேர்தல் அன்று மது விற்பனையை தடுக்க சிறப்பு பறக்கும் படை

 

ஈரோடு, ஏப். 21: ஈரோடு மாவட்டத்தில் தேர்தலையொட்டி டாஸ்மாக் விடுமுறை தினத்தில் மது விற்பனையை தடுக்க சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி இன்று 21ம் தேதி முதல் 23ம் தேதி ஆகிய 3 நாட்களில் டாஸ்மாக் கடைகள், தனியார் பார்கள் அனைத்திருக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் விடுமுறையின்போது பிற மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை தமிழ்நாட்டின் எல்லைக்குள் கடத்தி வந்து, மாவட்டத்தில் கள்ளத்தனமாக விற்பனை செய்வதை தடுக்க சிறப்பு பறக்கும் படை 10 தாலுகாகளிலும் அமைக்கப்பட்டுள்ளது.  மேலும், மதுபாட்டில்களை விற்பனைக்காக வாகனங்களில் கடத்தி செல்வது போன்ற முறைகேடுகள் நடைபெறா வண்ணம் தீவிமாக கண்காணிக்கப்படும். அவ்வாறு மதுபாட்டில்களை கொண்டு வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Tags : Erode ,Erode district ,TASMAC ,
× RELATED கோபி தொகுதி முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்