×

ஒன்றிய உள்துறை அமைச்சர் வருகை கொடுமுடியில் ட்ரோன் பறக்க தடை

ஈரோடு,ஏப்.19: ஒன்றிய உள்துறை அமைச்சர் வருகையையொட்டி கொடுமுடியில் ட்ரோன் பறக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டது. ஈரோடு கலெக்டர் கந்தசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க இன்று (19ம் தேதி) ஈரோடு வருகை தர உள்ளார்.

அவரது ஹெலிகாப்டர் வந்திறங்கும் ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாமரைப்பாளையம், தாமரை மெட்ரிகுலேசன் பள்ளி மைதானம் மற்றும் பள்ளி மைதானத்திலிருந்து சிவகிரி செல்லும் வழிகளில் 2 கி.மீ சுற்றளவுக்குள் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

 

Tags : Drone ,Kodumudi ,Union Home Minister ,Erode ,Collector ,Kandasamy ,Amit Shah ,Tamil Nadu Assembly election ,
× RELATED ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்