×

மோடிகிட்ட சொல்லி மசோதாவ கொண்டு வர சொன்னதே நாங்கதான்! எடப்பாடி ஒப்புதல்

 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கமணியை ஆதரித்து, திருச்செங்கோடு-பரமத்தி சாலையில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நாமக்கல் மாவட்டம், அதிமுக கோட்டை. நம் கூட்டணி இயற்கையானது, வலிமையானது. எனக்கு எம்பி என்ற அடையாளம் கொடுத்த மாவட்டம் இது. திருச்செங்கோடு எம்பியாக இருந்தேன். இன்று நாமக்கல் எம்பி தொகுதியாகி விட்டது.

அதிமுக ஆட்சியில் அதிக திட்டங்கள் பெற்ற மாவட்டம் நாமக்கல். இது வேளாண்மை நிறைந்த பகுதி. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பயிர்க்கடன் ரத்து செய்யப்படும். கடையில் கிடைக்கும் அரிசி போன்றே, ரேஷன் கடையில் தரமான அரிசி கொடுக்கப்படும். எத்தனை ஆயிரம் கோடி செலவானாலும் கொடுப்போம். இந்த மசோதாவை தாக்கல் செய்தது அதிமுக. பிரதமர் மோடி நம்மிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். நாம் ஏற்றுக்கொண்டதால், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வந்தார். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Modi ,Edappadi ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Thiruchengode-Paramathi road ,Thangamani ,Namakkal district ,Kumarapalayam ,
× RELATED விஜய்க்கு போடும் ஓட்டு என்டிஏவுக்கே...