×

விஜய்க்கு போடும் ஓட்டு என்டிஏவுக்கே சாதகம்: கார்த்தி சிதம்பரம் எச்சரிக்கை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நேற்று கார்த்தி சிதம்பரம் எம்பி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் களத்தில் புதிதாக நடிகர் ஒருவர் வந்துள்ளார். சோசியல் மீடியாவை மட்டும் நம்பி, எந்த டீடைல்சும் பேசாமல் ஒரு அரசியலை பின்பற்றுகிறார். அவருக்கு ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பதை நான் மறுக்கவில்லை.

இது நிலைத்து நிற்குமா? அடுத்த தேர்தல் வரை நிலைத்து நிற்பார்களா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் ரசிகர்கள் கூட்டம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். அந்த தாக்கம் வாக்குகளாக மாறி, வெற்றியை தருமா என்பது என்னை பொறுத்தவரை கேள்விக்குறி. மக்கள் சித்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும்.

தன்னுடைய வாக்கு பயனுள்ளதா, இல்லை வீணாக போகிற வாக்கா என சிந்தித்து பார்க்க வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை மிகத்தெளிவாக இருக்க வேண்டும். நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாஜ வந்து விடக்கூடாது. சினிமா மோகத்தில் போடப்படும் ஓட்டு மறைமுகமாக மற்றவர்களுக்கு சாதகமாக மாறும். இளைஞர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Tags : Vijay ,NDA ,Karthi Chidambaram ,Sivaganga district ,Karaikudi ,
× RELATED காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!