×

சினிமா மோகத்தால் சிகவினர் ஜய் பக்கம் செல்லமாட்டார்கள்: திருமாவளவன் திட்டவட்டம்

 

விருத்தாசலம் தொகுதி மதசார்பற்ற கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்தை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இந்த தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி கண்ட விஜயகாந்தின் மனைவி பிரேமலதா போட்டியிடுகிறார். ஜெயலலிதாவுக்கு பிறகு ஒரு பெண்மணி ஒரு அரசியல் இயக்கத்துக்கு தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். அவரை நாம் தூக்கிக் கொண்டாட கடமைப்பட்டிருக்கிறோம்.

அதிமுக கூட்டணியில் சேர்க்க எவ்வளவோ முயற்சி மேற்கொண்டார்கள். அவர் சாதுரியமாக பாஜ உள்ளிட்ட வலதுசாரிகளின் கூட்டணியில் சேர மாட்டேன், என மதச்சார்பற்ற கூட்டணியில் தேமுதிகவை இணைத்துக் கொண்டார். தேமுதிக நம்மோடு வந்தது, நம் அணிக்கு மதிப்பு கூடி இருக்கிறது என மு.க. ஸ்டாலினிடம் நான்தான் கூறினேன். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழ்நாட்டில் 200 இடங்களில் வெற்றி பெறும்.

சினிமா மோகத்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விஜய் பக்கம் சென்று விட்டார்கள் என கூறுகிறார்கள். நீங்கள் தந்தை பெரியார், அம்பேத்கர், மார்க்சிய கொள்கைகளை உள்வாங்கிய தோழர்கள். எங்களுக்கு சினிமா மோகம் கிடையாது என உறுதிப்படுத்த வேண்டும். கூட்டணி தர்மத்தை மீறக்கூடியவர்கள் அல்ல விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.

உங்களை சிதறடிக்க ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம். உடைந்த பாமக இங்கே போட்டியிடுகிறது. எடப்பாடி பழனிசாமி ஊராட்சி மன்ற தலைவருக்கு கூட தகுதி இல்லாத ஒரு நபர், என்று அன்புமணி கூறினார். ஆனால் இப்போது மாற்றி பேசுகிறார். பிரேமலதாவை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Jai ,Thirumavalavan ,Viduthalai Siruthaigal Party ,Premalatha Vijayakanth ,DMDK ,Virudhachalam ,Vijayakanth ,Premalatha ,
× RELATED விஜய்க்கு போடும் ஓட்டு என்டிஏவுக்கே...