×

மேற்காசிய போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி 7.44 சதவீதம் சரிந்தது: வர்த்தக பற்றாக்குறை ரூ.1,92,231 கோடியானது

புதுடெல்லி: மேற்காசிய போர் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 7.44 சதவீதம் சரிந்து, ரூ.3,61,956 கோடியானது. இதன் மூலம் வர்த்தக பற்றாக்குறை ரூ.1,92,231 கோடியாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 7.44 சதவீதம் சரிந்து ரூ.3,61,956 கோடியாகியுள்ளது. இதுபோல் இறக்குமதியும் 6.51 சதவீதம் குறைந்து ரூ.5,54,187 கோடியானது.

முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் இது ரூ.5,92,875 கோடியாக இருந்தது. இதன் மூலம் வர்த்தக பற்றாக்குறை ரூ.1,92,231 கோடியாக உள்ளது. இதுகுறித்து ஒன்றிய வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் கூறியதாவது: மேற்காசிய போர் காரணமாக ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் அதிக சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இருப் பினும், ஏற்றுமதி சிறப்பாகவே உள்ளது.

கடந்த 2025-26 நிதியாண்டு முழுமைக்கும் கணக்கிடும்போது பொருட்கள் மற்றும் சேவைகள் சேர்த்து மொத்த ஏற்றுமதி ஏற்றுமதி 4.22 சதவீதம் அதிகரித்து அதிகரித்து ரூ.79,98,000 கோடியாக உயர்ந்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர் காரணமாக மார்ச் மாதத்தில் இந்தியாவின் மேற்கு ஆசிய நாடுகளுக்கான ஏற்றுமதி 57.95 சதவீதம் குறைந்துள்ளது என்றார்.

* விலைவாசி கிடுகிடு: பண வீக்கம் 3.88% ஆனது
மேற்காசிய போர் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியால் எரிபொருள், மின்சாரம் மற்றும் உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரித்ததால் கடந்த மாதத்தில் மொத்த விலை பண வீக்கம் 3.88 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 38 மாதங்களில் இல்லாத உச்சமாகும்.

மேலும், இத்துடன் சேர்த்து மொத்த விலை பண வீக்கம் தொடர்ந்து 5வது மாதமாக உயர்வை சந்தித்துள்ளது. கடந்த பிப்ரவரியில் மொத்த விலை பண வீக்கம் 2.13 சதவீதம். கடந்த ஆண்டு மார்ச்சில் 2.25 சதவீதமாக இருந்தது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பிற உற்பத்தி பொருட்கள் அடிப்படை உலோகங்கள், உணவுப் பொருட்கள் விலை உயர்வே இதற்கு காணம் என தொழில்துறை அமைச்சகம் தெரிவித்தள்ளது.

Tags : India ,West Asian War ,New Delhi ,Union Government ,
× RELATED வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு...