புதுடெல்லி: இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் நீண்ட இழுபறிக்கு பின் முடிவானது. இந்த ஒப்பந்தம் தொடர்பான முக்கிய அம்சங்கள் அடங்கிய ஆவணம் கடந்த பிப்ரவரி 9ம் தேதி வௌியானது. பின்னர் இதில் சில மாற்றங்களை செய்து உண்மைத்தாள் என்ற பெயரில் பதிய அறிக்கையை வௌ்ளை மாளிகை வௌியிட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இந்தியா அமெரிக்கா இடையே இறுதி வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதிபர் டிரம்ப் விதித்த வரிகளை ரத்து செய்து அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், ஒப்பந்தம் கையெழுத்தாவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இந்திய அதிகாரிகள் குழுவினர் அடுத்த வாரம் வாஷிங்டன் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இந்த குழுவில் யார், யார் இடம்பெறுவார்கள் என்பது தெரியவில்லை.
