திகில் படங்களால் பயப்படும் யஷ்

பான் இந்தியா நடிகர் யஷ், வரும் 26ம் தேதி வெளியாகும் ‘டாக்ஸிக்: எ ஃபைரி டேல் ஃபார் குரோன்-அப்ஸ்’, நவம்பர் 8ம் தேதி வெளியாகும் ‘ராமாயணா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். ‘ராமாயணா’ டிரைலரில் ராவணனாக வரும் கம்பீரமான தோற்றமும், குரலும் அவரை பெரிதும் ரசிக்க வைத்துள்ளது. இந்நிலையில் யஷ் கூறுகையில், `பேய் படங்கள் அல்லது திகில் படங்களை நான் பார்க்க மாட்டேன். எனக்கு பயப்படுவது என்பது பிடிக்காது. பயப்படுவதற்காக தியேட்டருக்கு போய் ஏன் பணத்தை செலவழிக்க வேண்டும்? திகில் படங்களை பார்ப்பது, தேவையில்லாமல் நம்முடைய இதய துடிப்பை அதிகரிக்கும்.

அதனால்தான் அந்தவகை படங்களில் இருந்து நான் விலகியிருக்கிறேன். ஒரு படம் என்பது நம்மை முழு மனதுடன் ரசித்து, உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டுமே தவிர, பயத்தில் நடுங்க வைப்பதாக இருக்கக்கூடாது’ என்றார். ரசிகர்கள் மத்தியில் ‘ராக்கிங் ஸ்டார்’ என்று பிரபலமாகி வரும் அவர், நிஜ வாழ்க்கையில் திகில் படங்களை பார்க்க பயப்படுவதாக சொன்னதை அறிந்த சில நெட்டிசன்கள், `என்னது, ராக்கி பாய்க்கு திகில் படம்னா பயமா?’ என்று கிண்டல் செய்கின்றனர்.

Related Stories: