பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தீர்த்தஹள்ளி நகரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன், நாகவேணி, 4 வயது சந்தோஷ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
சிவமொக்கா மாவட்டம் இந்திராநகரில் இன்று அதிகாலை, மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு குடும்பத்தின் கொட்டகை புதைந்ததில், மூன்று வயது குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இறந்தவர்கள் கொப்பல் மாவட்டம், கங்காவதி தாலுக்காவில் உள்ள கொக்கரேகரு கிராமத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் (35), அவரது மனைவி நாகவேணி (28) மற்றும் அவர்களது மகன் சந்தோஷ் என அடையாளம் காணப்பட்டனர். அதிகாலை 2.30 மணியளவில் கொட்டகையின் மீது குன்று சரிந்து விழுந்தபோது, குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருந்தனர். அருகிலுள்ள கொட்டகையில் தங்கியிருந்த நபரும் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் பெய்த இடைவிடாத மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுக்குப் பிறகு, தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைகள் துறை மற்றும் காவல்துறையினர் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உடல்களை மீட்கும் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். மல்நாடு பகுதியில் பெய்த தொடர் கனமழையால் குன்று சரிந்து விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது
