இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் மகன் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்

 

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் மகன் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனின் மூத்த மகன் மருத்துவர் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். இவரின் மறைவு கட்சித் தொண்டர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவத் துறையில் பல சேவைகளைச் செய்த இவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகின்றது.

அவரது மறைவுக்குத் முதல்வர் விஜய் இரங்கல் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் மூத்த மகன் மருத்துவர் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

தனது அன்பு மகனை இழந்து தவிக்கும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: