ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குல்காமில் நேற்று தீவிரவாதிகள் திடீரென தாக்கியதில் வெளிமாநில தொழிலாளி பலியானார். இன்ெனாருவர் காயம் அடைந்தார். காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வரும் வெளிமாநில தொழிலாளர்களை குறிவைத்து அடிக்கடி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
நேற்றும் குல்காமின் கேலாம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வரும் வெளிமாநிலத்தை சேர்ந்த 2 தொழிலாளர்களை குறிவைத்து தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார், மற்றொருவர் காயமடைந்தார். இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
