திருவனந்தபுரம்: மலையாளத்தில் விஸ்வகுரு, புழையம்மா, நேதாஜி, நமோ, ஆதிவாசி உள்பட பல படங்களை இயக்கியவர் விஜீஷ் மணி. இவரது வீடு திருச்சூர் மாவட்டம் சாவக்காடு அருகே உள்ள முதுவட்டூர் பகுதியில் உள்ளது. இந்தநிலையில் நேற்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் அவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை பரிசோதித்த போது ரெயின் கோட் அணிந்த 2 பேர் சுவர் ஏறி குதித்து உள்ளே வந்து ஜீப்புக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்த சம்பவம் குறித்து சாவக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
