தங்கம் விலை தொடர் சரிவு பவுனுக்கு ரூ.480 குறைந்தது: நகை பிரியர்கள் மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,05,240க்கு விற்பனை செய்யப்பட்டதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். தங்கத்தின் விலை நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ. 155 குறைந்து ஒரு கிராம் ரூ.13,215க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ. 13,155க்கு விற்பனை செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.1,05,720க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று ரூ.480 குறைந்து ஒரு பவுன் ரூ.1,05,240க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு மொத்தம் ரூ.1,720 வரை சரிந்துள்ளதுசஇந்த தொடர் சரிவு, வரவிருக்கும் சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு நகை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.

Related Stories: