சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,05,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம், வட்டி விகித ஏற்றத்தாழ்வுகள், புவியியல் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
அதாவது கடந்த 25ம் தேதி பவுனுக்கு ரூ.560 அதிகரித்து பவுன் ரூ.1 லட்சத்து 6,400க்கு விற்றது. 26ம் தேதி ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமம் ஏற்படவில்லை. தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,370க்கும், பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6,960க்கும் விற்றது.
இதையடுத்து தங்கம் விலை நேற்று அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு ரூ.155 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,215க்கும், பவுனுக்கு ரூ.1,240 குறைந்து பவுன் ரூ.1 லட்சத்து 5,720க்கும் விற்றது. தங்கத்தை போல வெள்ளி விலையும் நேற்று குறைந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து கிராம் ரூ.235க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி ரூ.2.35 லட்சத்துக்கும் விற்றது.
இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,05,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.13,155க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235க்கு விற்பனையாகிறது.
