2 நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1240 குறைந்தது: வெள்ளியும் கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் சரிந்தது

 

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த 25ம் தேதி பவுனுக்கு ரூ.560 அதிகரித்து பவுன் ரூ.1 லட்சத்து 6,400க்கு விற்றது. 26ம் தேதி ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமம் ஏற்படவில்லை.தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,370க்கும், பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6,960க்கும் விற்றது. தங்கம் விலை நேற்று அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு ரூ.155 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,215க்கும், பவுனுக்கு ரூ.1,240 குறைந்து பவுன் ரூ.1 லட்சத்து 5,720க்கும் விற்றது. தங்கத்தை போல வெள்ளி விலையும் நேற்று குறைந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து கிராம் ரூ.235க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி ரூ.2.35 லட்சத்துக்கும் விற்றது.

Related Stories: