கிணத்துக்கடவில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்

*பீகாரை சேர்ந்த 5 பேர் கைது

கிணத்துக்கடவு : கோவை – பொள்ளாச்சி சாலையில் கிணத்துக்கடவு அருகே 15 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை – பொள்ளாச்சி சாலையில், ஏலூர் பிரிவு அருகேயுள்ள தனியார் பள்ளி அருகே கிணத்துக்கடவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கையில் பைகளுடன், சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த 5 பேரை அழைத்து, அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர்.

அப்போது கஞ்சா இருப்பதும், அதனை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது.

அவர்கள் வைத்திருந்த சுமார் 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது ஹபிபுல்லா (27), முகமது மொய்தீன் (25), முகமது காதிர் (40), முகமது வாசிம் (47), எம்.டி. மஜேபுல் (23) ஆகிய 5 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: